Related Posts Plugin for WordPress, Blogger...
alt text

எனக்கிருக்கும் மக்கள் எப்போதும் இருப்பாங்க!- கார்த்திக்

Click Here -1
alt text

Nanga Movie Audio Launch in Karthik.

Click Here -2
alt text

Watch Online Trailer of Puli Vesham Starring Karthik and Sadha.

Click Here -3
alt text

புலி வேஷம்_ படக்குழுவினருடன் ஒரு சந்திப்பு.

Click Here -4
alt text

நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய காதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறார்.

Click Here -5
alt text

Jaya Tv Interview With Karthik Diwali Special.

Click Here -6
alt text

Karthik on T.V Interview.

Click Here -7
alt text

கார்த்திக்,ஆர்.கே,சதா திவ்யா நடித்துள்ள புலிவேசம் இம்மாதம் 26-ந்தேதி திரைக்கு வருகிறது.

Click Here -8
alt text

கார்த்திக்கு எம்.ஜி.ஆர் விருது.

Click Here -9
alt text

Karthik Latast Gallery 2010.

Click Here -10
Flying bat in a marquee
உங்களுடைய கருத்துக்கள் மற்றும் கார்த்திக்கின் தகவல்களை அனுப்பவும் எமது தளத்தில் பிரசுரிக்கப்படும்.அனுப்பவேண்டிய முகவரி மின்னஞ்சல்Email - actorkarthik@gmail.Com

நவரச நாயகன் கார்த்திக் இன் பிறந்த நாள் இன்று...

  • by
  • Welcome Karthik Fans
  • தமிழ் சினிமா ரசிகைகளை ஒவ்வொரு காலகட்டத்திலும் பல நடிகர்கள் கவர்ந்து இழுத்தனர். இதில் அனைவருக்கும் சிம்மசொப்பனமாக விளங்குவது நவரச நாயகன் கார்த்திக் தான்.

    பிரபல நடிகர் முத்துராமன் அவர்களின் மகனான கார்த்திக் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமானார்.

    முதல் படமே மாபெரும் வெற்றியடைய அதை தொடர்ந்து இவர் நடித்த நினைவெல்லாம் நித்யா, இளஞ்சோடிகள், நினைவுகள், என பல படங்கள் நடித்தாலும், 1986ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த மௌன ராகம் படம் தான் கார்த்தியின் பெண் ரசிகைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்தது.
      
    இப்படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைந்தது 20 நிமிடம் தான், ஆனால், அதன் பாதிப்பு இன்று வரை மௌன ராகம் படத்தின் கார்த்திக் போல் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் முயற்சி செய்து கிடைத்தது பல்ப் தான்.



    தனது நடிப்பால் விரைவிலேயே "நவரச நாயகன்" என்ற பட்டத்தைப் பெற்றார். 20 வயதில் நாயகனாக அறிமுகமான கார்த்திக் சுமார் 35 ஆண்டுகளாக திரையுலகில் தனக்கொரு இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை தமிழ் மற்றும் தெலுங்கு 2 மொழிகளிலும் 130 படங்களில் கார்த்திக் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதை தொடர்ந்து கார்த்தி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவிட்டார்

    அதன்  பின் இவர் நடித்தஅக்னி நட்சத்திரம், கண் சிமிட்டும் நேரம் வருஷம் பதினாறு, கிழக்கு வாசல் நாடோடி தென்றல், கோபுர வாசலிலே, அமரன், பிஸ்தா, உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, பாண்டி நாட்டுத் தங்கம்,பெரிய வீட்டு பணக்காரன்,சின்ன ஜமீன்,கோகுலத்தில் சீதை,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்,பூவேலிஎன இவர் நடித்த அனைத்து படங்களும் மெகா ஹிட் தான். 

    இவர் 4 முறை சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

    1981 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான கார்த்திக்,
    தற்போது இளம் நாயகர்களுடன் இணைந்து கார்த்திக் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷுடன் இணைந்து கார்த்திக் நடித்த அனேகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

    தொடர்ந்து அமரன் 2 திரைப்படத்தில் நாயகனாகவும், இளம்நடிகர் வைபவுடன் இணைந்து ஜிந்தா திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

    தற்போது இவரின் மகனும் சினிமாவில் கலக்க களம் இறங்க, அவருக்கும் போட்டியாக அனேகன் படத்தில் புதிய பரிமாணத்தில் வில்லனாக மிரட்டியிருப்பார் கார்த்திக். அவர் இதேபோல் என்றும் திரையில் தோன்றி நம்மை மகிழ்விக்க வேண்டும் என இவரின் பிறந்தநாளான இன்று http://karthikfan.blogspot.com தன் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.
    Read More...

    Happy Birthday

  • by
  • Welcome Karthik Fans

  • Read More...

    சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டரில் கார்த்திக்?

  • by
  • Welcome Karthik Fans
  • கடந்த 80 மற்றும் 90களில் கோலிவுட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவராக விளங்கிய நவரச நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளைக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆன 'அனேகன்' படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து கார்த்திக் மீண்டும் ஒரு ரவுண்ட் கோலிவுட்டில் வருவார் என அப்போதே பேசப்பட்டது.


    அதை உறுதிப்படுத்துவதுபோல் அவருக்கு 'அமரன் 2' பட வாய்ப்பு வந்தது. இந்த படத்தை அடுத்து கார்த்திக் இன்னொரு படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.







    இயக்குனர் வசந்த் அவர்களிடம் உதவியாளராக இருந்த வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வைபவ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக விஜய் ஆண்டனியின் 'இந்தியா பாகிஸ்தான்' படத்தில் நடித்த சுஷ்மா ராஜும்
    நடிக்கின்றனர்.

     


    இந்த படத்திற்கு 'ஜிந்தா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு கேங்ஸ்டார் காமெடி படம் என்றும் கார்த்திக் இந்த படத்தில் கேங்ஸ்டார் டான் ஆக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.







    சூப்பர் ஸ்டார் ரஜினியும் 'கபாலி' படத்தில் கேங்ஸ்டார் டான் ஆக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    'நீ எங்கே என் அன்பே', கப்பல் படங்களை அடுத்து வைபவ் ரெட்டிக்கு இந்த படம் ஒரு பிரேக் கொடுக்கும் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் 'ஹலோ நான் பேய் பேசுகிறேன்' மற்றும் ஆதாம்ஸ் ஆப்பிள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..



    Read More...

    Karthik and Vaibhav come together for a new genre

  • by
  • Welcome Karthik Fans
  • One of the most charming actors, Tamil Cinema has ever seen and a leading hero of the 1990s Karthik started of the year 2015 playing a smart and suave villain against Dhanush in the K.V. Anand directed ‘Anegan’. Now the veteran actor has taken up an important role in ‘Jindhaa’ which has been launched today with a formal pooja.

    ‘Jindhaa’ produced by SAF Raja of SAF Cine Mass and directed by S.K. Vetri Selvan will have Vaibhav and Sushma Raj of ‘India Pakistan’ fame in lead roles while Karthik will be donning a pivotal role.


    Speaking about his debut film, Selvan, a former assistant to director Vasanth, said “This film is of a new genre 'Dark gangster comedy'.  It is a energy oriented script and even as i was writing this script Karthik sir and Vaibhav sat into that. I'm sure they will bring life and energy to my characters who are lively.  My producer S A F Raja happens to be my child hood friend and i thank him for providing me the platform to show case my potentiality.”

    The film will have music score rendered by Hasaar Kasif, the nephew of ‘Isaipuyal’ A.R. Rahman and K.Dinesh has been entrusted with cinematography. K.M.Riaz Mohammed will take care of Editing.
    Read More...

    Jinthaa Movie Pooja Stills

  • by
  • Welcome Karthik Fans
























  • Read More...

    ஜிந்தாவில் பந்தாவாக களம் இறங்கும் கார்த்திக்

  • by
  • Welcome Karthik Fans
  • தமிழ் சினிமாவில் தன்னுடைய நவரச நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திக். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார். இதில் வில்லனாக நடித்த கார்த்திக்கை ரசிகர்கள் பெருமளவு வரவேற்றனர். தற்போது இவர் ‘ஜிந்தா’ என்னும் படத்தில் பந்தாவாக களம் இறங்கியிருக்கிறார்.

    ஜிந்தா படத்தில் நாயகனாக வைபவ் நடிக்கிறார். நாயகியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் நடித்த சுஷ்மா ராஜ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் படத்தில் பெரும் பங்காக இருக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

    இந்த படத்தை எஸ்.ஏ.எப்.சினிமாஸ் என்ற புதிய நிறுவனம் சார்பாக எஸ்.ஏ.ராஜா தயாரிக்கிறார். இயக்குனர் வசந்திடம் பணியாற்றிய எஸ்.கே.வெற்றி செல்வன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் சகோதரியின் மகன் ஹசார் காசிப் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

    உற்சாகமும் துள்ளலும் நிறைந்த கதையாக இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். இந்தக் கதையை எழுதும்போதே கார்த்திக் மற்றும் வைபவ்வை மனதில் வைத்துதான் எழுதியிருக்கிறார். இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்று இயக்குனர் வெற்றி செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
    Read More...

    Navarasa Nayagan Karthik Gallery 2015

  • by
  • Welcome Karthik Fans







































































  • Read More...